வயதானாலும் பிள்ளைதான் ! - மாலுமி வெயில் காலை எட்டு மணிக்கே உச்சிவெயில் மாதிரி இருந்தது. ஏழு வயது பிள்ளையை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக முத்தான் பீடுநடை போட்டுக் கொண்டிருந்தான். அவனை விட்டுவிட்டு வாத்தியாரிடம் "நல்லா நாலு உதை போட்டு படிக்க வையுங்க சாமி" என்று விண்ணப்பித்துக் கொண்டு வயலுக்கு செல்ல வேண்டும். என்னதான் வெயில் என்றாலும் நாத்து நட, களை பிடுங்கன்னு வயலுக்குள்ள இறங்கிட்டா வெய்யிலே தெரிவதில்லை. ஆனால் இங்கே ரோட்டுலதான், ... ' எழவு, இந்த சூடு சுடுதே'? "அப்பா...." முத்தானுக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. மகனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுக்காத குறையாக நடக்க ஆரம்பித்தான். "யப்பா..." "ஏண்டா" வள்ளென்று விழுந்தான். "ஒண்ணுமில்லப்பா" மவுனம் சாதித்தான். முத்தானின் ரத்தமல்லவ...